April 16, 2015

வலி.வடக்கு மீள்குடியேற்ற பகுதிகளை சுரேஷ் எம்.பி. நேரில் சென்று பார்வையிட்டு மக்களுடன் சந்திப்பு!

யாழ்.வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதியளிக்கப்பட்ட பகுதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், மக்களை சந்தித்து தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார்.
கடந்த 11ம் திகதி வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 8 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதிகளுக்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மக்களுடன் பேசியுள்ளதுடன் மீள்குடியேற்றப் பகுதிகளில் உள்ள நிலைமைகள், தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்.
குறித்த விஜயத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வலி,வடக்கிலிருந்து 27 வருடங்களுக்கு முன்னர் இம்பெயர்ந்த மக்கள் தற்போது மீள்குடியேற்றத்திற்காக வந்திருக்கின்றனர். இந்நிலையில் மீள்குடியேறும் மக்களுடைய நிலங்களில் படையினர்,  தொடர்ந்தும் நிலைகொண்டிருக்கின்றனர்.
நாங்கள் இரு இடங்களுக்குச் சென்றிருந்த நிலையில் இரு இடங்களிலும் தலா 50 ஏக்கர் வீதம் படையினர் முகாம்களுக்காக காணிகளை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த நிலத்திலிருந்த மக்கள் தற்போதும் கோப்பாய், உரும்பிராய் பகுதிகளில் முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.
மேலும் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மக்களுடைய பிரதான பாதைகளை சுற்றி முட்கம்பி வேலிகளை படையினர் அமைத்துள்ளார்கள். இதனால் பல மக்களுடைய வீடுகள் விடுவிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் மலசலகூடம் மற்றும் கிணறு ஆகியன விடுவிக்கப்படாமல் முட்கம்பி வேலிகளுக்குள் சென்றிருக்கின்றது.
இதேபோன்று மலசலகூடம் மற்றும் கிணறுகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வீடுகளை விடுவிக்கவில்லை.
எனவே மீள்குடியேற்றம் என்பது முழுமையாக இருக்கவேண்டும். இந்த விடயம் தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் கருத்தில் எடுக்கவேண்டும் என கூறினார்.vali-norths-03vali-norths-04vali-norths-05vali-norths-06vali-norths-08vali-norths-02vali-norths-01

No comments:

Post a Comment