வடமடராட்சி அல்வாய்ப்பகுதியில் இயங்கிவரும் சமூக விரேததக் குழுவான குமார் குழுவினருக்கு எதிராக அல்வாய் மக்கள் இன்று கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் யாழில் இயங்கி வரும் வாள்வெட்டு, கொள்ளைக் கும்பல்களில் குமார் குழுவும் ஒன்று.
பல ஆண்டுகளாக இக்குழுவினர் சமூக விரோத யெற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றதாக பொதுமக்கள் குற்றம்சுமத்துகின்றனர் இதுவரை 5 திருமணங்கள்வரை முடித்த இந்தக்குமார் என்பவர் தனது மனைவிகளில் ஒருவரை சுமார் மூன்றாண்டுகளிற்கு முன்பு எரித்துக் கொலைசெய்துள்ளார்.
அத்துடன் வடமராட்சியில் பலரது கை கால்கள் வெட்டப்பட்டு துண்டாடப்பட்ட சம்பவங்கள் இவராலேயே மேற்கொள்ளப்பட்ள்ளது. வெட்டுக்குமார் என வடமராட்சி மக்களால் அழைக்கப்படும் இவர் கால் நடைகள் திருடும் திருட்டுச்சம்பவங்கள்முதல் பல கொள்ளைகளையும் புரிந்துள்ளார். ஆனாலும் இவருக்கெதிராக உறுதியான தண்டனைகள் வழங்கப்படதமையால். தொடரந்தும் சமூக விரோதச்செயல்களில் ஈடபட்டுவருகிறார்.
இந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம் இரவு (25-4) அல்வாய்ப்பகுதியை சேரந்த 47 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி திருச்செல்வம் (செந்தூரன்) குமார் குழுவினரால் அடித்துக்கொல்லப்பட்டார். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்திருந்தனர்.
எனினும் இவ்வாறான சம்பவங்கள் இனி வருங்காலங்களில் இடம்பெறாமல் தடுக்கப்படவேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ் மாவட்டத்தவில் சமூக விரோத குழுவொன்றிற்கெதிராக மக்கள் கண்டனப்போராட்டத்தில் ஈடுபட்டது இதுவே முதலாவது சந்தரப்பமாகும்





No comments:
Post a Comment