March 7, 2015

தொடர்கின்றது நல்லூரில் உண்ணாவிரதம்! நடை பயணம் ! இன்றையதினம் நல்லூரில் உண்ணாவிரத இணைந்து கொள்ளவுள்ளனர்(.photos)

கடத்தப்பட்டும் சரணடைந்தும் காணாமல் போனவர்களின் உண்மை நிலையை வெளியிட வலியுறுத்தியும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரியும் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் நல்லூரில் இன்று தொடர்கின்றது.







இப்போராட்டத்திற்கு ஏற்கனவே பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தாவும் அத்தகை அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும் தெரிவித்திருக்கின்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமது போராட்டம் தொடருமென்றும் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல் போனோர் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டம் நேற்று நல்லூர் ஆலய வீதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நாளையும் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்தப்போராட்டத்திற்கு பொலிஸாரிடம் பாதுகாப்பும் கோரப்பட்டிருந்தது.
ஆயினும் பொலிஸார் பாதுகாப்பு வழங்கவில்லை. இதனால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் அச்சுறுத்தல்களைத் தாண்டியும் தமது போராட்டத்தை தொடர்ந்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எமது உறவுகளுக்காகவே நாம் உயிருடன் இருக்கின்றோம். அவர்களை மீட்பதற்கு நாம் பல தரப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றோம். ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பவில்லை. ஆகவே தான் நாம் இத்தகைய போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம்.

இந்தப் போராட்டமானது நாளைய தினமும் மூன்றாவது நாளாகவும் நடைபெறும். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி முள்ளிவாய்யகாலில் இருந்து நடைபணம் மேற்கொண்டிருக்கின்ற தரப்பினர்களும் இன்றையதினம் எம்முடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.
எம்மைப் போன்றே அவர்களுக்கும் பல அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. ஆயினும் அதற்கு அடிபணியாது அவை அனைத்தையும் தாண்டி அவர்கள் தமது நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதே போன்று நாமும் எமது போராட்டத்தையும் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா நிமிர்த்தம் இன்றைய தினம் நல்லூருக்கு வருகை தந்துள்ள சிங்கள மக்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன், விபரங்களைக் கேட்டறிந்துடன், போராட்டக் காரருக்கு ஆதரவாக வாசகங்களையும் எழுத்திக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment