கடந்த மாதம் 4ம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைச் சுடர் பயணம் தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தியவாறு பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளினூடாக பயணம் செய்து கடந்த 28ம் திகதி யேர்மனியை
வந்தடைந்திருந்தது. 31ம் நாளான இன்று (06.03.2015) விடுதலைச் சுடர் போகும் (Bochum) மற்றும் முல்கைம் (Mueheim) நகரங்களினூடாக பயணம் செய்தது.
டோர்ட்மூன்ட் (Dortmund) நகரில் இருந்து எடுத்துவரப்பட்ட விடுதலைச் சுடர் 10:30 மணியளவில் போகும் (Bochum) மக்களிடம் கையளிக்கப்பட்டது.போகும் (Bochum) மக்களின் சார்பாக தமிழ் உணர்வாளர் திரு வரதன் அவர்கள் சுடரை பெற்றுக்கொண்டார். போகும் புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைச் சுடர் பயணம் ஊர்வலமாக நகர மையப்பகுதி வழியாக எடுத்துவரப்பட்டது. பயணத்தின் போது இலங்கைத்தீவில் தமிழர்களிற்கெதிராக நடாத்தப்படும் இனவழிப்பு பற்றியும் மறுக்கப்பட்டு வரும் நீதி பற்றியும் மக்களுக்கு விபரிக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மதியம் 12 மணியளவில் போகுமில் (Bochum)நிறைவுசெய்யப்பட்டு முல்கைம் (Mueheim) மக்களிடம் கையளிப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டது.
போகும் (Bochum) நகரில் இருந்து எடுத்துவரப்பட்ட சுடரை முல்கைம் (Mueheim) மக்களின் சார்பாக தமிழ் இளையோரமைப்பைச் சார்ந்த செல்வன் செழியன் அவர்கள் பெற்றுக்கொண்டார். சுமார் மணியளவில் முல்கைம் (Mueheim) புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைச் சுடர் பயணம் நகர மையப்பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதன்போது மக்களிற்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பல்லின மக்களும் தமிழர்களிற்கெதிராக இலங்கைதீவில் நடாத்தப்படும் இனவழிப்பு தொடர்பாக கேட்டறிந்து சென்றனர். சுமார் மணியளவில் முல்கைம் (Mueheim) நகரில் நிறைவுசெய்யப்பட்டு டுசெல்டோர்ப் (Duesseldorf) நகர மக்களிடம் கையளிப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டது.
விடுதலைச் சுடர் நாளைய தினம் டுசெல்டோர்ப் (Duesseldorf) மற்றும் கேல்ன் (Koeln) நகரில் நடைபெறவுள்ளது. ஆகையால் அனைவரையும் எழுச்சியுடன் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.
No comments:
Post a Comment