காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும் ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் சாகும் வரையான உண்ணாவிரதப்போராட்ட எச்சரிக்கையுடன் இன்று பிற்பகலுடன் முடிவடைந்தது.
அதேவேளை ஐ.நா வின் நீதி வேண்டி முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணமும் உண்ணாவிரதிகளுடன் இணைந்து கொண்டது.
மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற நிகழ்வினில் காணாமல் போனோரது உறவுகள் கண்ணீருடன் தமக்காக முள்ளிவாய்க்காலிலிருந்து கால்நடையாக வந்து சேர்ந்த இளைஞரணியினரை வரவேற்றிருந்தனர்.பரஸ்பரம் கண்ணீரால் அப்பகுதி நிறைந்து போயிருந்தது.
அங்கு உரையாற்றிய வல்வெட்டித்துறை நகரசபை தலைவரும் நடைபயணிக்கு தலைமை தாங்கி வந்திருந்தவருமாக சதீஸ் எமது மக்களிற்காக எதிர்வரும் காலத்தினில் எச்சந்தர்ப்பத்திலும் இளைஞரணி களம் இறங்கவுள்ளதாக தெரிவித்தார். போராட்டத்தை முடித்து வைத்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன்,இளைஞரணி செயலாளர் சிவகரன், நீதிக்கும் சமாதானத்திற்குமான நல்லெண்ண அமைப்பினை சேர்ந்த வணபிதா மங்களராஜா மற்றும் இந்து மதகுரு ஆகியோருடன் வல்வெட்டித்துறை நகரசபை தலைவரும் நடைபயணிக்கு தலைமை தாங்கி வந்திருந்தவருமாக சதீஸ் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
இறுதியில் போராட்டகாரர்களிற்கு மென்பானம் வழங்கி போராட்டம் முடிவுக்குகொண்டுவரப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment