கடந்த மாதம் 4ம் திகதி தொடக்கம் தமிழின இனப்படுகொலைக்கு நீதி வேண்டி ஜெனிவா நோக்கி பயணித்து வரும் விடுதலைக் சுடர் பயணம் கடந்த 28ம் திகதி தொடக்கம் யேர்மனி நாட்டில் பயணித்து வருகிறது. 32ம் நாளான இன்று (07.03.2015) டுசெல்டோர்ப் (Düsseldorf) நகரை வந்தடைந்தது.
சுமார் 10 மணியளவில் முல்கைம் (Mülheim) நகரில் இருந்து எடுத்து வரப்பட்ட சுடர் டுசெல்டோர்ப் மக்களிடம் கையளிக்கப்பட்டது. டுசெல்டோர்ப் மக்களின் சார்பாக அருட்தந்தை Albert Koolen அவர்கள் பெற்றுக்கொண்டார். வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் சிற்றுரையுடன் விடுதலைச் சுடர் பயணத்தை ஆரம்பித்து வைக்க தமிழ் இளையோரமைப்பைச் சார்ந்த செல்வன். சாருஜன் அவர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இப் பேரணியில் சுமார் 50ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு எமது மக்களின் விடுதலைக்காகவும் உரிமைகளிற்காகவும் குரல் கொடுத்தனர். மக்கள் ஊர்வலமாக வரும் பொழுது தமிழ் மக்களிற்கெதிராக நடைபெறும் இனப்படுகொலைக்கெதிரான வாசகங்கள் அடங்கிய பாதைகளைத் தாங்கியவாறு வந்தனர். இதன்போது மக்களிற்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. டுசெல்டோர்ப் புகையிரத நிலையத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைச் சுடர் பயணம் 12 மணியளவில் Nordrhein-Westfalen பாராளுமன்றத்திற்கு முன்னால் நிறைவு செய்யப்பட்டு கேல்ன் (Köln) நகர மக்களிடம் கையளிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
டுசெல்டோர்ப் நகரிலிருந்து எடுத்து வரப்பட்ட சுடர் கேல்ன் மக்களிடம் கையளிக்கப்பட்டது. கேல்ன் மக்களின் சார்பாக தமிழ் இளையோரமைப்பைச் சார்ந்த செல்வி. ஜெனித்திரா அவர்கள் பெற்றுக்கொண்டார். சுமார் 15 மணியளவில் கேல்ன் Domplatte வில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைச் சுடர் பயணம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 16:30 மணியளவில் Domplatte வில் நிறைவு செய்யப்பட்டது. இதன்போது மக்களிற்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. 32ம் நாள் விடுதலைச் சுடர் பயணம் கேல்ன் நகரில் நிறைவு செய்யப்பட்டு பிராங்க்பர்ட் நகர மக்களிடம் கையளிப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டது.
விடுதலைச் சுடர் பயணம் நாளைய தினம் 15 மணியளவில் பிராங்க்பர்ட் நகரில் Konstabler Wache வில் நடைபெறவுள்ளது. ஆகையால் அனைவரையும் எழுச்சியுடன் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.
No comments:
Post a Comment