March 9, 2015

அவுஸ்திரேலிய அகதிகள் சட்டத்துக்கு ஐ.நா. எதிர்ப்பு!

அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை சர்வதேச சட்டங்களை மீறி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


அதன் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக விசேட நிபுணர் ஜோன் மெண்டிஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பப்புவா நியுகினி மற்றும் நவுறு அகதி முகாம்கள் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் பேணப்படுகின்றன.

அங்குதுன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன. அகதிகள் மனிதாபிமான ரீதியா அணுகப்படுவதில்லை. இது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment