March 7, 2015

முள்ளிவாய்காலில் இருந்து நல்லூர் வரை புதைந்த இடந்தில் இருந்து புதிய பயணம்!

நேற்றைய முன்தினம் முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் தொடங்கப்பட்ட நடை பயணம் இராணுவப்புலனாய்வாளர்கள், இராணுவத்தினர்பல அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நேற்றய தினம் புதுக்குடியிருப்பை
வந்தடந்து
நேற்றுக் காலை புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து ஆரம்பமாகி மதியம் உடையார் கட்டை 12 மணியளவில் வந்தடைந்தது மீண்டும்
உடையார்கட்டில் இருந்து மாலை பரந்தன் சந்தியினை வந்தடைந்தது.
தொடர்ந்தும் ஒருவர் பின் ஒருவராக மோப்பநாய்கள் போல அலையும் புலனாய்வாளர்களின் கடும் அச்சுறுத்தலையும் பொருட்ப்படுத்தாது
மறுக்கப்பட்ட நீதிக்காக ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கும் இளையவர்களை பார்த்ததும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஒரு உற்சாகத்துடனும் வரவேற்றதோடு மட்டும் அல்லாது தங்குமிட வசதிகள் தேனீர் போன்ற வசதிகளை பல அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் செய்துகொடுத்து குறிந்த இளைஞர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.





நேற்றயதினம் முள்ளிவாய்கால் நடைபயணம் ஆரம்பமாகியபோது சற்று பதட்டமான நிலையில் காணப்பட்டவர்களும் இன்றய தினம் தமக்கு
மக்கள் ஆதரவு கிடைத்ததினால் ஒரு தென்புடனும் எதையும் எதிர்கொள்ளும் மனதுடனும் குறித்த பயனத்தினை மேற்கொள்கின்றனர். குறித்த பயணத்தினை மேற்கொள்ளும் இளைஞர் ஒருவர் உடல்நிலை சரியில்லாதபோதும் கூட தாம் முன்னெடுத்த பயனத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தொடர்ந்தும் சுட்டெரிக்கும் வெயிலிலும் கால்கள் வலிக்க வலிக்க நடைபயனத்தினை மேற்கொள்கின்றனர் மேலும் குறித்த பயணத்தினை மேற்கொள்ளும் இந்த இளையவர்களை எந்த ஒரு அரசியல் தலைவர்களும் தொடர்புகொள்ளவோ அல்லது நேரில் சென்று பார்வையிடவோ இல்லை என்பது மிக மிக வேதனையான விடயம்
இந்த நடைபயணம் சம்மந்தமாக அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது.......
நாங்கள் இந்த மண்ணிலே பிறந்து வளர்ந்த தமிழர்கள் எங்கள் உறவுகள் விடும் கண்ணீரை கண்டு எங்கள் மனம் வேதனையடைந்தது காணவில்லை என்றால் கடையில் வாங்கிக்கொடுக்க காணமல் போனது பணமோ பெருளோ அல்ல!
தாய் தந்தை கணவன் மனைவி அக்கா அண்ணா தம்பி என்று மாறி மாறி ஒவ்வெரு உறவுகளையும் தொலைத்து விட்டு நடைபிணங்களைப்போல கோவில் வாசல்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் மாறி மாறி நடந்து சலித்துப்போன எமது உறவுகளுக்காக கடத்தப்பட்டவர்கள் காணமல் போனவர்கள் பற்றிய ஒரு இறுதியான உறுதியான தகவலை இந்த புதிய அரசு வளங்கவேண்டும் அதுமட்டுமல்லாது காரணம் இன்றிசிறையிலே அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்பதற்காகவும்.


குறித்த நடை பயணத்தினை நாங்கள் மேற்கொள்கின்றோம் இதனை நாங்கள் முள்ளிவாய்காலில் இருந்து ஆரம்பித்தமைக்கான காரணம் எங்கே எமது உறவுகள் பூவும் காயும் கனத்த பிஞ்சுமாக கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டார்களோ அங்கிருந்தே தொடகவேண்டும் அந்த ஆத்மாக்களின் ஆசியுடனே எமது பயனத்தை தொடங்கியுள்ளோம்.
அதேவேளை இதனை அரசியல்ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியான கண்ணோட்டத்திலோ யாரும் பார்க்கவேண்டாம் எமக்கு ஆதரவாக மக்கள் உள்ளார்கள் ஆனால் இந்த பேரணி இன்னமும் எழுர்ச்சி மூலை முடுக்குகளிலே உறங்கிக்கிடக்கும்இளையவர்கள் எழுந்து வரவேண்டும் ஜனநாயக ரீதியிலே அகிம்சைமுறையிலே எவருக்கும் இறையூறின்றி நாங்கள் மேற்கொள்ளும் இந்த நடை பயனத்தினை பயங்கரவாதம் என்றோ தீவிரவாதம் என்றோ யாரும் கூறிவிட முடியாது மாற்றத்திற்கான இந்த புதிய அரசாங்கத்தினால் ஒரு மாற்றம் உருவாகவேண்டும்.
அது நிரந்தரமானதும் நிலைத்து நிக்ககூடியதுமாக இருக்கவேண்டும் என்பதே எமது நோக்கம் மாறக குழப்பம் விளைவிக்கவேண்டும் என்பதோ அல்லதுகூட்டம் கூட்ட வேண்டும் என்பதோ அல்ல ஆனால் எமக்கு மிக மிக வருத்தமான விடயம் ஒரு நீதிக்காக நியாயத்துக்காக சுட்டெரிக்கும் இந்த வெய்யிலையும் பொருட்படுத்தாது நடை பயனம் செய்யும் பலர் பல பல கோணங்களிலே புகைப்படங்கள் எடுப்பதும் எம்மை சங்கடப்படுத்துகின்றது
நேற்று மாலை பரந்தன் சந்தியினை வந்தடைந்தபோது மக்கள் கூட்டம் எம்மை சூழ்ந்து தமது ஆதரவிலை தெரிவித்த போது அங்கு வருகைதந்த பொலிசார் எமது பயனத்தினை இடையில் நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தனர் அனால் அங்கே கூடிய மக்கள் எமக்காக பொலிசாருடன் வாதம் புரிந்தும் இறுதியில் எம்மை உடனடியாக வெளியேறும்படி கூறி எம்மை கட்டாயப்படுத்தி பளை வரைக்கும் அழைத்துச்சென்று விட்டுள்ளனர்.
ஆனால் நாம் சோர்ந்து போகமாட்டோம் ஊடகங்களின் ஆதரவும் மக்களின் ஆதரவும் வலுவாக உள்ளது மீண்டும் இன்று பரந்தன் சந்தியில் இருந்து எமது பயனத்தை ஆரம்பிக்க உள்ளோம் அதற்காக தமிழ் உணர்வு உள்ள தமிழர்களின் நலன் சார்ந்த அனைவரின் அதரவினையிம் வேண்டி நிற்கின்றோம்.
- கதிரவன் -

No comments:

Post a Comment