February 3, 2015

இறுதியுத்தத்தில் கொல்லப்பட்டோர் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு – பொதுநலவாய நாடுகள்!

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் பொது மக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான நீதி விசாரணைக் குழுவுக்கான ஒத்துழைப்பை வழங்க பொதுநலவாய
நாடுகள் முன்வந்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஸ் சர்மா இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கமலேஸ் சர்மா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

இதன் போது இந்த விடயம் குறித்தும் பேசியதாக அவர் கூறியுள்ளார்.

யுத்தம் குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு உள்நாட்டு விசாரணை குழு ஒன்றை நியமிக்கும் எண்ணத்தில் மைத்திரிபால சிறிசேன இருக்கிறார். இது சிறந்த விடயம்.

அந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டும், இறுதி யுத்தத்தில் 40000க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலும் விசாரணை நடத்த பொதுநலவாய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment