February 27, 2015

இன்ரபோலால் தேடப்படும் தமிழ் கிரிக்கட் வீரரின் மனைவி! கொழும்பில் கொலையா? சதியா?

திருகோணமலையை சேர்ந்த கிறிக்கெற் வீரர் ஈஸ்வரதாசன் கேதீஸ்வரன். கடந்த வருடம் எப்ரல் 18 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
கேதீஸ்வரனுக்கு வயது 28. சம்பவ இரவு சிரச் சேதம் செய்யப்பட்டார். இவர் யுத்தம் உச்சம் பெற்று இருந்த 2006 ஆம் ஆண்டுப் பகுதியில் பிரித்தானியாவுக்கு சென்றார். லண்டனில் உள்ள கிறிக்கெற் விளையாட்டு கழகம் ஒன்றின் நட்சத்திர விளையாட்டு வீரராக பிரகாசித்தார். போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் நாடு கடத்தப்பட்டார்.
பல வருடங்களாக காதலித்து வந்த ஹம்சத்வாணியை திரும்பி வந்து மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்தார். கேதீஸ்வரன் குடும்பத்தில் இளையவர். ஹம்சத்வாணி இவருக்கு தூரத்து உறவு. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கட்டிட நிர்மாணம் சம்பந்தமாக பட்டம் படித்தவர். திருமணத்தை தொடர்ந்து இவரை மேற்படிப்புக்கு கேதீஸ்வரன் லண்டன் அனுப்பி இருக்கின்றார். மனைவிக்கும், இவருக்கும் பிரஜாவுரிமை இவ்விதம் கிடைக்கும் என்று கேதீஸ்வரன் நம்பி இருந்தார்.

2011 ஆம் ஆண்டு நாடு திரும்பினார். இரு வாரங்கள் தங்கி இருந்து பிரஜாவுரிமை பெறுகின்றமைக்கு தேவையான ஆவணங்களை பெற்று சென்று இரு வாரங்களில் திரும்பி சென்றார்.
ஒரு வருடம் கழித்து கேதீஸ்வரன் படுகொலை செய்யப்பட்டார். இதில் பாதுகாப்பு படையினருக்கு சம்பந்தம் உள்ளது என புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் குற்றம் சுமத்தினர்.
பொலிஸ் மா அதிபரின் அறீவுறுத்தலுக்கு அமைய குற்றப் புலனாய்வு பிரிவினர் அதிரடி விசாரணைகளை முடுக்கி விட்டார்கள்.
வாடகைக் கொலையாளிகள் இருவரை கைது செய்ய பொலிஸாரால் முடிந்தது. ஒருவர் பயணிகள் விமான விமானி. மற்றவர் விமானப் படை விட்டோடி. இப்படுகொலையை மேற்கொள்ள கொழும்பில் இருந்து தனியார் பஸ்ஸில் புறப்பட்டு வந்திருந்தார்கள். கொலையை முடித்துக் கொண்டு மீண்டும் கொழும்பு திரும்பிப் போனார்கள். இருவரும் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார்கள்.
இவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்கள் பேரதிர்ச்சி கொடுத்தன. கேதீஸ்வரனை படுகொலை செய்ய மனைவி ஹம்சத்வாணிதான் இவர்களை 1750 ஸ்டேர்லிங் பவுணுக்கு வாடகைக்கு அமர்த்தி இருக்கின்றார். ஹம்சத்வாணிக்கு படை விட்டோடியுடன் விமானியுடன் கள்ளக் காதல். இதுவே படுகொலைக்கு காரணம்.
சம்பவ தினம் மாலை கிறிக்கெற் பயிற்சியை முடித்து விட்டு மனைவியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கேதீஸ்வரன் சென்று கொண்டிருந்தபோது கச்சிதமாக படுகொலையை மேற்கொண்டு இருக்கின்றனர்.
கேதீஸ்வரனை படையினர்தான் கொன்றனர் என்று காரணம் காட்டி ஹம்சத்வாணி பிரித்தானிய பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்து உள்ளார்.
இப்படுகொலை வழக்குக்காக ஹம்சத்வாணியை பொலிஸார் தேடி வருகின்றனர். இன்ரபோல் சர்வதேச பொலிஸாரால் தேடப்படுகின்ற கிரிமினல்கள் வரிசையில் இவரின் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment