February 4, 2015

சுதந்திர தினத்தில் மகிந்த பங்கேற்கவில்லை!

இன்றைய தினம் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உள்விவகார அமைச்சினால் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்விற்கான அழைப்புக்களை விடுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.
தாம் நிகழ்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவிக்கக் கூட இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அரசாங்கத்தின் உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, நிருபமா ராஜபக்ஸ மற்றும் துமிந்த சில்வா ஆகியோர் இந்த சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment