February 9, 2015

ஐ நா நோக்கி விடுதலைச்சுடர் போராட்டம் – 5ஆவது நாள்!

ஐ நா நோக்கி பிரித்தானியாவிலிருந்து பெப்ரவரி 4ஆம் நாள் புதன்கிழமை ஆரம்பமான விடுதலைச்சுடர் போராட்டம் பெப்ரவரி 8ஆம் நாள்ஞாயிற்றுக்கிழமை 5ஆவது நாளாகத் தொடர்கிறது. இப்போராட்டமானது
காலை 10.00மணிக்கு வடகிழக்கு லண்டன் Clay Hall இலிருந்து ஆரம்பமானது.
தமிழீழம் ஒன்றே தமிழருக்கான ஒரே தீர்வென உறுதியோடு பயணிக்கும் தமிழ் மக்களால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சிறீலங்கா இனப்படுகொலை அரசை உலகநீதியின் முன்னிறுத்தவும் தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி ஆகியவற்றை அங்கீகரித்தல், தமிழ் மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் தாயகமாகிய புலத்திலும் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் புகலிட நாடுகளிலும் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் இவ்விடுதலைச்சுடர் போராட்டமானது மார்ச் திங்கள் 16ஆம் நாள் ஐ நா முன்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ள மாபெரும் கொட்டொலிப் போராட்டத்துடன் இணைய உள்ளது.
ஐந்தாம் நாள் போராட்டத்தின் போது பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வடகிழக்கு லண்டன் செயற்பட்டாளர்களுடன் திரு கே விபுல் அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியினையும் ,திரு வி.செல்வநேசன் அவர்கள் விடுதலைச்சுடரினையும் ஏந்திச் சென்றனர். இவர்களுடன் எம்.மயூரன், பி.சுகுமாரன்,எம்.மதிவதனன்,ரி.ஜீவமலர்,ஆகியோரும் இணந்து இன்றைய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
Barkingside,Ganshill ஊடாக தொடர்ந்த இன்றைய போராட்டத்தில் Ilfordஇலுள்ள Consrvative கட்சி செயலகத்தில் மனு
கொடுக்கப்பட்டது . 5ஆம் நாள் காலைப்போராட்டம் Newbury Parkஇல் முடிவடைந்தது.
இப்போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கிய சிறுவெளியீடுகளும் இந்த பயணத்தில் மக்களிடம் கொடுக்கப்பட்டன.
பிற்பகல் 2 மணி 30 நிமிடமளவில் மீண்டும் ஆரம்பமான இன்றைய மாலை நேர விடுதலைச்சுடர் போராட்டம் Illford இன் பல பகுதிகள் ஊடாகச் சென்று Seven Kings என்னும் இடத்தில் மாலை 6 மணியளவில் நிறைவு பெற்றது. இதன்போது Illford வடக்கு நாடாளுமன்ற உறுப்பினரான conservative கட்சியைச் சார்ந்த திரு Lee Scott அவர்களின் செயலகத்திலும் விடுதலைச்சுடர்ப் போராட்டக் கோரிக்கைகளை விளக்கிய மனு சேர்ப்பிக்கப்பட்டது. ஐந்தாம் நாள் போராட்டத்தின் போது அவ்வப்பகுதி மக்களையும் சந்தித்து சமகால அரசியல் விடயங்கள் பற்றி செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடினர். சிறீலங்காவில் தமிழ் மக்கள் தமது வாக்குரிமையை இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவைப் பதவியிலிருந்து நீக்குவதற்காகப் பயன்படுத்தினரே தவிர, தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் சிங்கள ஆட்சியாளர்களை வரவேற்பதற்காக அல்ல என்பது பற்றியும் உலக அரசியல் நகர்வுகளைப் புரிந்து கொண்டு தமிழ் மக்கள் பயணிக்க வேண்டிய இக்கட்டான நிலையில், மிக அவதானமாகவும் தெளிவோடும் தாய்மண்ணை மீட்கும் பணியை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. சிறீலங்கா விடுதலைநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா சம்பந்தன் மீது மக்கள் கொண்டிருக்கும் கடுஞ் சினத்தை தமிழ் மக்கள் வெளிப்படுத்தினர்.IMG_1235
நன்றி
என்றும் அணையாத ‘விடுதலைச் சுடர்’
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

No comments:

Post a Comment