January 12, 2015

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு ஆலோசகர் பதவி!

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகராக, முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின்  தலைவருமான சரத் பொன்சேகா
நியமிக்கப்படவுள்ளார்.

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் பறிக்கப்பட்ட சரத் பொன்சேகாவின் குடியுரிமை, இராணுவப் பட்டங்கள், மற்றும் பதவிகள், மீள வழங்கப்பட்டதும் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகராக அவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இல்லாததாலும், அவரது குடியுரிமை இன்னமும் மீள வழங்கப்படாததாலும், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள அமைச்சரவை பதவியேற்பில் அவருக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்படாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment