January 12, 2015

இந்திய இலங்கை கூட்டு சதியின் சதிராட்டத்தில் தொடரும் தமிழர் பிரிவினை சூழ்ச்சிகளை தமிழர்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.!

தமிழர் பிரதிநிதிகள் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் எண்ணங்களை பிரதிபலித்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பிரதிநிதிகள். அவர்கள்
தமிழின பகை அரசுகளின் குரலாக அல்லது ஏவிவிட்ட செயல் வடிவாக எம் மக்களுக்கு தவறு இழைப்பதை தமிழ் மக்கள் தட்டிக் கேட்டே ஆக வேண்டும்.
அண்மையில் நடக்கும் கூத்துகளை பார்த்துக் கொண்டே இருக்கின்றோம். இருப்பினும் தமிழின ஒற்றுமை சந்தி சிரிக்க கூடாது என அமைதி காக்கின்றோம்.
இப்போ புதிய சூழ்ச்சியில் தமிழ் தேசிய உணர்வாளரான அனந்தி அக்காவுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சியை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
சிலர் தாம் நினைத்த படி ஆட தமிழர் தரப்பு அரசியல் பிரதிநிதிகளுக்கு எவரும் இங்கு எதேச்சை அதிகாரம் கொடுக்கவில்லை.
உண்மையான உணர்வாளர்கள் மேல் பூசும் சேறு எமது போராட்டத்தின் மீது பூசும் சேறு. இதை பிழைப்பு வாத அரசியல் செய்யும் எவருக்கும் எம் இனம் அனுமதிக்க முடியாது.
எவருக்கும் அடிபணியாமல் நிமிர்ந்து நிற்கும் தேசியவாதியாக அனந்தி அக்கா எம் மண்ணில் இன்னமும் போராடும் ஒற்றை செயலால் தான் எம் போராட்டத்தின் மீது கூட எம் மக்கள் பற்றுறுதி வைத்து இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து அவரை உளவியல் ரீதியாக பாதித்து தனிமைப்படுத்த இந்திய கூலிகளாக செயல்ப்படும் சிலர் முயல்கின்றார்கள்.
இதே போல் தான் முன்பும் மண்டியிடா தன்மானத் தமிழர்களாக திகழ்ந்த கஜேந்திரன்.பத்மினி அக்கா . மற்றும் கஜேந்திரகுமார் போன்ற வளைந்து கொடுக்காத தமிழ் உணர்வாளர்களை ஓரம் கட்டி மக்களிடம் இருந்து சூழ்ச்சியாக பொய்கள் பாடி தனிமைப்படுத்தினர் சிலர்.
இப்பொழுது அதே நிலையை அனந்தி அக்காவுக்கு சூழ்ச்சியாக செய்ய முனைகின்றார்கள். மக்கள் தெரிவு செய்த பிரதிநிதியை தண்டிக்கும் அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சிலருக்கு யார் கொடுத்தது?
. வடமாகாண சபையை விட்டு அவரை விரட்ட முனைகிறார்கள். உளவியல் அழுத்தம் கொடுக்கின்றார்கள். ஒரு பெண்ணாக நிமிர்ந்து நின்று உன்னத போராட்டத்தின் தொடர்ச்சிக்காக நீதிக்காக வெளிப்படையாக துணிந்து குரல் கொடுக்கும் வீரப் பெண் அனந்தி அக்காவுக்கு நடக்கும் அநீதி ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் நடக்கும் அநீதி என்றே பார்க்க வேண்டும்.
இந்திய இலங்கை சூழ்ச்சிக்கு உடன் இருந்து கூத்தாடும் அமைப்பின் சில கை கூலிகள் உண்மையான எவருக்கும் அடிபணியாத அஞ்சா நெஞ்சம் கொண்ட தமிழ் தீவிர தேசியவாதியை வெளியேற்ற முனைப்பு காட்டுகின்றனர். இதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளபோவதில்லை.
மக்களுக்கு எதிராக செயல்ப்படுவோரை மக்களே தூக்கி எறிவார்கள் என்பதை கூட்டமைப்பின் இந்திய சிங்கள சில கைப் பொம்மைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அனந்தி அக்கா தமிழ் இனவிடுதலைக்காக பல போராட்டங்களை துணிகரமாக மேற்கொண்ட வீர நங்கை. தமிழர் அரசியலில் எங்கள் தேசியத் தலைமையின் பாசறையில் வளர்க்கப்பட்ட தலை குனிந்து மண்டியிடாத ஒரு அரசியல் போராளி.
தமிழர்க்கு நடந்தது ஒரு இனப்படுகொலை என சொல்ல வக்கில்லாத அமைப்புகள் விதித்த தடைகளை மீறி ஐ. நா. வில் எம் மண்ணில் நடந்த இனப்படுகொலைகளை எடுத்துச் சொன்னமைக்காக அன்றே பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டவர். அன்றே போலிகளை தமிழ் மக்கள் தட்டிக் கேட்டு இருக்க வேண்டும்.
தமிழர் அவலங்களை .தமிழர்க்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்களை உலகிற்கு எடுத்தியம்பிய ஈழத்து சங்கொலி அனந்தி அக்காவுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் எம் மக்களின் விடுதலைக்காக போராட நினைக்கும் அனைத்து தமிழ் குரல்களுக்கும் கொடுக்கப்படும் அழுத்தமே.
அனந்தி அக்காவுக்கு அநீதி நிகழ்ந்தால் உலகத் தமிழினம் மட்டுமல்ல தமிழீழ தமிழர்களும் பொங்கி எழ வேண்டும். இந்திய அரசின் பொம்மைகளாக ஆடும் எவருக்கும் எம் தேசிய உணர்வாளரை தண்டிக்க எந்த தகுதியும் இல்லை.
மீறி இது போன்ற அநீதிகள் நடக்கும் என்றால் இது வரை நாம் பொறுத்து காத்திருக்கும் எம் வெஞ்சினம் வெடிக்கும். எமக்கு இழைக்கப்படும் இந்திய அரசின் அநீதிகளுக்கு காரணம் யார் யார் என்ற அம்பலங்கள் வெளி வரும். மக்களுக்கு உண்மைகளை சொல்லும் போராளிகளை புறம் ஒதுக்க நினைப்பவரை எம் மண்ணில் இருந்து நாம் ஒதுக்கும் காலம் உருவாகும். எச்சரிக்கின்றோம். திருத்திக் கொள்ளுங்கள்.. உங்கள் தவறுகளையும் திருகு தாளங்களையும் இனியேனும்.
மக்கள் ஒன்றும் மாக்கள் அல்ல. நீங்கள் நினைத்தபடி நீங்கள் பின்னும் வலையில் விழுவதற்கு.
நான் யாரை குறிப்பிடுகின்றேன் என்பதை தமிழ் பிரதிநிதிகள் சிலர் நன்கு உணர்வார்கள் என நம்புகின்றேன். நிறுத்திக் கொள்ளுங்கள் அனந்தி அக்காவுக்கு நீங்கள் செய்யும் அநீதிகளை!
கேட்பார் யாருமில்லா அபலை பெண் தானே என்ற ஏளனம் உங்களுக்கு. உணர்வு கொண்ட தமிழ் மக்கள் நாம் இருக்கின்றோம் அவர் பின்னால் என்பதை எவரும் மறந்து விடாதீர்கள்.

No comments:

Post a Comment