January 18, 2015

மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு மூடுவிழாவா!!

மத்தல ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாக விமானப் போக்குவரத்து
அமைச்சு அறிவித்துள்ளது.
மத்தல விமான நிலையத்தினால் அமைச்சுக்கு பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்தல ராஜபக்‌ஷ விமான நிலையம் முன்னரே பல தரப்புகளாலும் விமர்சனத்துக்கு உள்ளாகிய நிலையிலும் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷ தன்னிச்சையாக பெரும் செலவில் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Matala MR 01 Matala MR 02 Matala MR
mattala-rajapksa-airport

No comments:

Post a Comment