January 16, 2015

முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக பிரச்சார நடவடிக்கையில் செயற்பட்டோருக்கான பாதுகாப்பு விலக்கப்பட்டது!!

யாழ் மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவாக பிரச்சார நடவடிக்கைகளில் செயற்பட்டவர்களுக்கு பாதுகாப்புக்காக
வழங்கப்பட்ட காவல்துறைப்பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் யாழ் மாவட்டதின் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் அங்கஜனுக்கு வழங்கப்பட்ட நான்கு காவல்துறைப் பாதுகாப்பு விலக்கப்படவில்லையென யாழ் மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் விமலரத்தினா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலகத்தின் அறிக்கை அங்கஜனுடைய பாதுகாப்பு பற்றிய அறிக்கை சாதகமாக கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவருடைய பாதுகாப்பும் விலக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment