வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 18.01.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் மாநிலத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் கலை பண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டது.
அழித்துக் கொள்வோம் அடிபணியோம் என்று தம்மை ஆகுதியாக்கி வரலாறாகிய மாவீர வேங்கைகளின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வில் எழுச்சிப் பாடல்கள் இளையோர்களின் இன உணர்வு மிக்க எழுச்சி நடனங்கள் சிறுவர்களின் பேச்சுக்களுடன்; கவிதாஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றன. வங்கக்கடலில் வீரகாவியம் எழுதிச் சென்றவர்களின் நினைவுகள் சுமந்த காணொளிக் காட்சித்தொகுப்பு அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன் தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
No comments:
Post a Comment