செங்கலடி, ஏறாவூரைச் சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர் ஒருவர், சிலரால் மிக மோசமாக தாக்கப்பட்டுகவலைக்கிடமான முறையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
.
எறாவூர் 5ம் குறிச்சியைச் சேர்ந்த த.ம.வி.பு. கட்சியின் ஆதரவாளர் ஏகாம்பரம் பாக்கியநாதன் என்பவரே செங்கலடி செல்லம் தியேட்டருக்கு அண்மையில் வீதியால் சென்றுகொண்டிருந்த போது, கூரிய ஆயுதங்களினால் மிக மோசமாக தாக்கப்பட்டு வீதியில் வீசி எறியப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான குறித்த நபரை பொது மக்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர் தற்போது ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டபோதும், இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன், பலர் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
இதனால், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கிய செங்கலடியைச் சேர்ந்த பல தமிழ் இளைஞர்கள் தலைமறைவாகியும் வெளிநாடுகளுக்கும் தப்பியும் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் துரோகக்கும்பல்கள் மீது கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment