January 21, 2015

மிதக்கும் ஆயுதக் களஞ்சியக் கப்பல் சட்டரீதியானது - பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!

காலித் துறைமுகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மஹநுவர கப்பல் சட்ட ரீதியானது என சிறீலங்காப் பாதுகாப்புச் செயலாளர் பஸ்நாயக்க கூறியுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலித் துறைமுகத்திலிருந்து 7 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த மஹநுவர கப்பலில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் இருப்பதாக கூறப்பட்டு காவல்துறையினரால் அக்கப்பல் கரைக்கு வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது 3000 அதிகமான ஏகே 56 ரக துப்பாக்கிகள் மற்றும் பல லட்சம் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன. இவ் ஆயுதங்கள் சட்டவிரோதமானது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தன.


தற்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இவ் ஆயுதங்கள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானவை எனவும், ஆயுதக் களஞ்சியக் கப்பல் சட்டரீதியானது என்றும், இந்த ஆயுத விபரங்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சில் பதியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் சோமாலிக் கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஏனைய கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் இக்கப்பல் ஈடுபட்டுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment