January 27, 2015

சுன்னாகம் மின்நிலையத்திற்கு மின்சக்தி அமைச்சரின் குழு இன்று விஜயம். கழிவு எண்ணை தொடர்பில் ஆராய்வு!

சுன்னாகம் மின்நிலைய நொதேன் பவர் நிறுவனத்தின் மின்பிறப்பாக்கிகளின் கழிவு எண்ணை மக்களின் கிணற்று நீரில் கலந்து குடிநீருக்கு பெரும் சிக்கலை
ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இன் மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சிலிருந்து குழுவொன்று இன்று சுன்னாகத்து வருகை தந்துள்ளனர்.
மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ”சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்துக்கு ஏற்கனவே உறுதியளித்ததின் பிரகாரம், அமைச்சிலிருந்து Mr. Sulaakshans Jayawardena (Director, Development), இலங்கை மின்சார சபையில் இருந்து Mr. Mendis உட்பட எனைய சிலரையும் உள்ளடக்கும் விசேட உயர்மட்டக் குழுவொன்று சுண்ணாகம் மின்நிலையத்திற்கு வருகைதந்தனர்.
சுண்ணாகம் மின் சக்தி நிலைய Circuit Banglow வில் காலை 9. 30 மணியிலிருந்து ஆரம்பித்த இந்தக் குழுவானது சுண்ணாகம் மின் நிலையப் பகுதிகளையும் பார்வையிட்டு, அப்பகுதி நிலத்தடியில் கழிவு எண்ணெய்கள் உள்ளதா என்பவைகளை நவீன முறையில் கண்டறியும் வேலைகள் முதல், தங்களால் செய்யப்படவேண்டிய அனைத்து விடயங்களையும் கால தாமதமின்றிச் செய்வதாக உறுதியளித்தனர்.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையமானது சக்தி அமைச்சரைக் கொழும்பில் வியாழன்று சந்தித்தித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் முன்னிலையில் Northern Power Company இன் மின் பிறப்பாக்கிகளைச் செயற்படாது தடைசெய்யும் உத்தரவு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவால் பிறப்பிக்கப்பட்டுவிட்டது, அவை இப்போது இயக்கப்படுவதில்லை என்பதை, தம்மைச் சந்திக்கச் சென்றிருந்தவர்களுக்கு அக்குழு அறியக்கொடுத்தது


No comments:

Post a Comment