January 18, 2015

மகிந்த, நாமல் படங்கள் பொறிக்கப்பட்ட 68 ஆயிரம் மணிக்கூடுகள் கைப்பற்றப்பட்டன!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும அவரது மகன் நாமல் ராஜபக்சவின் படங்கள் பொறிக்கப்பட்ட ஒரு தொகை சுவர் மணிக்கூடுகள்
சப்புகஸ்கந்தவில் கைப்பற்றப்பட்டுள்ளன.
சப்புகஸ்கந்த காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மாபிம பிரேசத்தில் உள்ள துறைமுகக் களஞ்சிய சாலையில் மகிந்த மற்றும் நாமல் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட 68 ஆயிரம் சுவர் மணிக்கூடுகளும் அத்துடன் ஒரு தொகை தேர்தலுக்காக அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த களஞ்சியசாலையானது துறைமுக அதிகாரிக்கு 15 இலட்சத்துக்கு மேல் பணம் செலுத்தி பெறப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment