December 25, 2014

3 அமைச்சுப்பதவிக்காக தமிழினத்தை விற்க துணிந்துள்ள த.தே.கூட்டமைப்பு?

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபாலவை வெற்றிபெறவைத்தால் த.தே.கூட்டமைப்புக்கு 3 அமைச்சுப்பதவிகள் வழங்கப்படும் என்று ஜக்கிய தேசியக் கட்சியால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க உள்ளதாகவும் அதன் பின் 3 அமைச்சுப்பதவிகளை த.தே.கூட்டமைப்புக்கு வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் ஈழதேசம் இணையம் அறிகிறது.
இதில் முக்கியமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக பலமுறை செயல்ப்பட்டவரும் தமிழ் இன துரோகி கதிர்காமரின் இன்னொரு முகம் என்று வர்ணிக்கப்படுபவருமாகிய சுமந்திரனுக்கு வழங்கவுள்ளதாகவும் த.தே.கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து ஈழதேசம் இணையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அமைச்சுப்பதவிகள் வழங்கப்படும் போது சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை சொல்வதற்கு ரணில் தரப்பு  திட்டமிட்டுள்ளது, அதென்னவெனில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே குடையின் கீள் உள்ளோம் என்பதையே, இதையே சம்பந்தனை வைத்து யாழில் சிங்கக்கொடியை கையில் ஏந்திப்பிடிக்க வைத்தார் ரணில்.அதன் தொடர்ச்சியே 3 அமைச்சுப்பதவிகளும்.இதனால் அழியப்போவது தமிழர்களும் தமிழர்களின் போராட்டமும் என்பதோடு எமக்கான நீதி கோரும் போராட்டங்களும் சவப்பெட்டிக்குள் வைத்து பூட்டப்படும் என்பது தான் உண்மை.இதையே சம்பந்தன் தரப்பு செய்யத் துணிந்துள்ளது.
ஈழதேசம் இணையம் ஆரம்பத்திலிருந்து கூறிவருவது போல் இன்னும் பல சலுகைகளை(மக்களுக்கானதல்ல தமக்கான) பெற்றுக்கொள்வதற்காகவே சிங்கக்கொடி சம்பந்தன் இந்தியாவுக்கு போய் ஒளிந்துகொண்டுள்ளார்.தமக்கு தேவையான சலுகைகள் கிடைத்தவுடன் சம்பந்தன் அவர்கள் நாடு திரும்புவார்.

No comments:

Post a Comment