போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் 8 பேருக்கு
கொழும்பு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதனை ஆட்சேபித்தும் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாண மீனவர்கள் மூவரினதும் பேரின் உறவினர்களும் கிராம மக்களும் ஆயர் இல்லத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.
இன்று பிற்பகல் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் பொய்குற்றச்சாட்டினில் தண்டிக்கப்பட்டுள்ள இந்திய-இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியே மகஜர் ஒன்றினையும் யாழ். ஆயரிடம் அவர்கள் வழங்கியுள்ளனர்.



No comments:
Post a Comment