November 1, 2014

மட்டக்களப்பில் குடும்பத் தகராறு தூக்கில் தொங்கிய மாணவி !

மட்டக்களப்பு ஏறாவூர் மாவடிவேம்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பாடசாலை மாணவி ஒருவர்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 13 வயதான குறித்த மாணவி, பாடசாலை மாணவர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment