November 1, 2014

யாழில் ரவுடிகளை துரத்தித் துரத்தி வெட்டிய பிரபல பாடசாலையின் மாணவன்!

யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த
சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யாா் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தாா் என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினாா்கள் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.
இதே வேளை யாழ்ப்பாணபப் பாடசாலைகளில் மாணவா்களிடேயே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள அதே வேளை ரவுடிகளுடனான தொடா்புகளும் அதிகரித்துக் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment