கேணல் பருதி அவர்களின் உருவம் தாங்கிய தாங்கிய நடுகல்லிலிருந்து பருதி அவர்களின் உருவம் சிங்களக் கைக்கூலிகளினால் உடைத்து எடுத்துச்
செல்லப்பட்டுள்ளது. இச்சம்வமானது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு லாக்கூர்னோவ் மாநகர சபைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்து பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும கேணல் பருதி ஞாபகார்த்தமாக கட்டப்பட்டிருந்து நடுகல்லில் இருந்து பருதி அவர்களின் திருவுருவப் படத்தினை உடைத்தெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அன்றைய நாளே கலோவின் என்று அழைக்கப்படும் பேய்கள் திருநாளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேபோன்று கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற பேய்கள் திருநாளில் முகமூடிகள் அணிந்த சிங்களக் கைக்கூலிகள் பருதி அவர்கள் மீது வாளால் வெட்டிய சம்பவமும் நடந்தேறியிருந்தமை, பின்னர் ஒரு வருடம் கழித்தது 2012-ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் பருதி அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு நவம்வர் முதலாம் நாள் (வெள்ளிக்கிழமை நள்ளிரவு) பருதி அவர்களின் உருவம் பொறித்த படம் உடைத்தெடுக்கப்பட்டுள்ளமை கொலையாளிகள் இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்பதையே கட்டியம் கூறி நின்கின்றது.
No comments:
Post a Comment