போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும்
குற்றமற்றவர்கள் என விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்த மீனவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று அறிவித்து விடுதலை செய்யாவிட்டால் தேவையற்ற பின்விளைவுகள் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் விழா பொதுக்கூட்டம் மேல்புறம் சந்திப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை(02)இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment