யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மாவடிப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை
மாணவனொருவன் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் எஸ்.சுபராஜ் (வயது – 16) என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.
அராலி – தெல்லிப்பழை பிரதான வீதியூடாக குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மதிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment