01.11.2014 அன்று புதுக்குடியிருப்பு கிராமத்தில் மாபெரும் முன்பள்ளி / அறநெறி பாடசாலை ஆசிரியர் திருவிழா நிகழ்வு நடைபெற்றது. மக்கள் வெள்ளத்தில்
குதிரையாட்டம், சிலம்பாட்டம், கும்மி மற்றும் சிறுவர் நடனம் போன்ற நிகழ்வுகளுடன் முன்பள்ளி ஆசிரியர்கள் அணி அணியாக அழைத்துச்செல்லப்பட்டனர். புதுக்குடியிருப்பில் யுத்த அழிவிற்குப் பின் நடைபெற்ற பெரும் நிகழ்வாகும். இதில் ந. சிவசக்தி ஆனந்தன் (வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

மேற்படி நிகழ்வில் தலைமையுரையாற்றிய வைத்திய கலாநிதி சி. சிவமோகன் முன்பள்ளி ஆசிரியர்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கையில் அவர்களை கல்வியின் வேர்கள் என போற்றி பேசினார். தொடர்ந்தும் பேசிய அவர் இன் நிகழ்வை கூட சிலர் குழப்ப நினைக்கிறார்கள். ராணுவ புலனாய்வாரள்ர்கள் என்ற போர்வையிலான ஊடுருவல் அனாவசியமானது. நாம் எமது காணிகளை விடுவிப்பதற்காக எமது உரிமைகளை கோரி ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்தினோம். அது தவறா? இல்லை, உங்களது ஆக்கிரமிப்பு தான் தவறு என்றார்.
மேலும், நெடுங்கேணி பிரதேசத்தில் பிரஜைகள் குழுத் தலைவர் உங்களது காட்டு மிராண்டித்தனத்தால் காயமடைந்தார். எமது மனித உரிமைகளுக்காக போராடுவது தவறா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், அன்று நீ எம்மை சொல்லால் அடித்தாய், எமது இனத்தை செட்டிக்கு
ளம் முகாமில் சித்திரவதை செய்தாய், ஏளனம் செய்தாய். நேற்று நீ எம்மை கையால் அடித்தாய்! ஏன்? எமது காணி உரிமை கேட்டதற்காய்! இன்று நீ எம்மை பொல்லால் அடிக்கிறாய். எம்மை வாய்மூடி மௌனமாக இருக்க செய்ய. நாளை நீ எம்மை உன் ஆயுதத்தால் அடிப்பாய் ஏனெனில் உன்னிடம் பலம் உள்ளதால். ஆனால் என்றும் எமது தமிழின விடுதலை தீயை அழிக்க முடியாது என்றார்.
No comments:
Post a Comment