
பிள்ளைகளின் தாயான கலியுகமூர்த்தி சுகந்தி (வயது - 36) என்பவர் காணாமற்போயிருந்தார். இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று முள்ளிப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்ற சிலர் சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
பருத்தித்துறையில் உள்ள தனது நண்பியின் வீட்டுக்குச் சென்ற போது, காணாமற்போயிருந்த இளம் தாய், வடமராட்சி முள்ளிப் பகுதியில்
சடலம் அழுகிய நிலையில் உருக்குலைந்து காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பருத்தித்துறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் சடலத்தைப் பார்வையிட்டு பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment