September 10, 2014

முன்னாள் போராளி பயங்கரவாத தடுப்புப் பிரிவால் அழைக்கப்பட்டு விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி எழுத்தாளர் வெற்றிச்செல்வி என்று அழைக்கப்படும் வேலு சந்திரகலா நேற்றைய தினம்
வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவால் அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்ட வெற்றிச்செல்வி வெடி விபத்து ஒன்றின்போது தனது கண் ஒன்றையும் கை ஒன்றையும் இழந்தவர். மாற்று வலுவுள்ளவரான வெற்றிச்செல்வி போர் மற்றும் சமூக அவலங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான கல்விச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.
மன்னார் அடம்பனைச் சேர்ந்த இவர் ஓர் எழுத்தாளாவார். மாற்று வலு உள்ளவர்கள் குறித்தும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். தனது வாழ்வாதாரத்திற்காக சுயதொழில் முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார்.
புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு நிலையில் தன் வாழ்க்கையை இவ்வாறு போராட்டத்துடன் தொடரும் எழுத்தாளர் வெற்றிச்செல்வி விசாரணைக்காக வவுனியா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினாரால் அழைக்கப்பட்டுள்ளார். அங்கு நேற்றைய தினம் முழுவதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.X Ltte

No comments:

Post a Comment