September 10, 2014

ஜெனிவா போரணிக்கு வருகை தர இருந்த தி.வேல்முருகனுக்கு நுழைவிசை (விசா) ரத்து!

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் 15.09.2014 திங்கட்கிழமை முருகதாசன் திடல் முன்பாக மாபெரும் போரணி ஒன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதில் தமிழகத்தில் இருந்து ஜெனிவா போரணிக்கு  சிறப்பு பேச்சாளராக  தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் அவர்கள்  அழைப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் அவர்  ம் விசா விண்ணப்பம்  விண்ணப்பித்திருந்தார்.  ஆனால் அவருக்கு  விசா மறுக்க பட்டுள்ளது. இதனால் அவர் கலந்து கொள்ள இருந்த ஜெனிவா போரணி நிகழ்வில் கலந்து கொள்ள வில்லை.

வரும் 26 ஆம் திகதி  தமிழர் வாழ்வுரிமை கூடமைப்பு  சார்பாக   தி.வேல்முருகன் அவர்கள்   ஒரு லட்சம் மக்கள் ஒன்றிணைந்து தியாகி லெப் கேணல் தீலிபன் அவர்களின் வீரசாவடைந்த நாளில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment