September 14, 2014

இறைச்சிக்கடை நடத்துவற்கு சான்றிதழை பெற்று மிருகபலி நடத்தப்படமாட்டாது – ஆலய நிர்வாகம் அறிவிப்பு!

இறைச்சிக் கடையை நடத்துவதற்கான சான்றிதழை பெற்று, வருடாந்த மிருகபலி பூஜை நடத்தப்பட மாட்டாது என்று முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.  


இந்த ஆலயத்தில் வருடா வருடம் இடம்பெறும் மிருகபலி பூஜையை தடுக்கும் நோக்கில் பௌத்த மற்றும் சிங்கள கடும்போக்காளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். 

இதன்அடிப்படையில் அதற்கான அனுமதி சான்றிதழை பெற்று இந்த பூஜையை நடத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அண்மையில் தெரிவித்திருந்தன. 

எனினும் இறைச்சிக் கடையை நடத்துவதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டு ஆலயத்தின் பூஜையை நடத்தமுடியாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இந்த நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் முழு பிரதியையும் ஆராய்ந்து, இதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக ஆலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment