September 11, 2014

தமிழக கடற்தொழிலாளர்களின் படகுகளை ஒரு போதும் திருப்பி தரமாட்டோம் மகிந்த!

தமிழக கடற்தொழிலாளர்களின் மீன்பிடி படகுகளை திரும்ப கொடுக்க முடியாது. அவ்வாறு படகுகளை திரும்ப கொடுத்தால் அதே படகில் மீண்டும் வந்து மீன் பிடித்து அதே தவறை திரும்பவும் செய்வார்கள் என்று மகிந்த
தெரிவித்துள்ளார்.
கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறீலங்கா கடற்படை பிடித்துச் செல்கிறது.
பின்னர் மீனவர்களை விடுதலை செய்யும் சிறீலங்கா அரசு அவர்களது மீன்பிடி படகுகளை ஒப்படைக்க மறுத்து வருகிறது.
இதுபற்றி இலங்கை அதிபர் ராஜபக்சே இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து சிறீலங்கா கடல் பகுதியில் மீன் பிடிக்கிறார்கள். மேலும் மடிவலையை பயன்படுத்தி கடல் அடியில் உள்ள மீன் வளத்தை சுரண்டி நாசப் படுத்துகிறார்கள். இது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் வாழும் பெரும்பான்மை தமிழ் மீனவர்களின் வாழ் வாதாரத்தை பாதிக்கிறது. சிறீலங்காவின் பொருளா தாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால்தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. என்றாலும் தினக்கூலிகளாக மீன்படி தொழிலில் ஈடுபடும் அப்பாவி மீனவர்களை விடுதலை செய்து விடுகிறோம்.
ஆனால் மீன்பிடி படகுகளை திரும்ப கொடுக்க முடியாது. அவ்வாறு படகுகளை திரும்ப கொடுத்தால் அதே படகில் மீண்டும் வந்து மீன் பிடித்து அதே தவறை திரும்பவும் செய்வார்கள்.
சிறீலங்கா கடல் எல்லைக்குள் ஒன்றிரண்டு மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான படகில் வந்து மீன் பிடிக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு மோசமானவர்கள். சுற்றுச் சூழலையும் நாசம் செய்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கும் மோசமானவர்கள்.
மீன்களுக்கு எல்லைகள் கிடையாது. மீனவர்கள் தான் மீன்கள் இருக்கும் இடத்தை நாடிச் செல்கிறார்கள். இந்தியா–சிறீலங்கா உறவில் இந்த பிரச்சினையைதான் தீவிரமாக கவனிக்க வேண்டியுள்ளது.
இருநாட்டு மீனவர்களும் கூடிப்பேசி வருகிறார்கள். கடைசியாக இருநாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தை மே மாதம் கொழும்பில் நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தேக்க நிலையில் உள்ளது.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment