September 11, 2014

யேர்மன் தலைநகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டுவிழா 20141

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது தாய்மொழியை , எமது இன அடையாளத்தை ,எமது கலாச்சாரத்தை , எமது இனக்குழுமத்தை பேணும்
வகையில் ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் அனைவரும் உழைத்து வருகின்றோம். அந்தவகையில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை யேர்மன் தலைநகர் பேர்லினில் மிக சிறப்பாக தமிழர் விளையாட்டுவிழா 2014 நடைபெற்றது.


பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து , தமிழீழத் தேசியக் கொடி, யேர்மன் நாட்டின் தேசியக் கொடி, தமிழ்க்கல்விக் கழகத்தின் தமிழாலயக் கொடி ஆகியவை ஏற்றப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றி விழையாட்டு விழா ஆரம்பமாகியது.
 இவ் விழாவில் பேர்லின் தமிழாலய மெய்வல்லுனர் இல்லப்போட்டி, உதைப்பந்தாட்டம் , மென்பந்துத் துடுப்பாட்டம், கையிறு இழுத்தல், முட்டி உடைத்தல் என  பல்வேறு விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டது .விளையாட்டுப் போட்டியில் விளையாட்டுக் கழகங்களும், விளையாட்டு வீரர் - வீராங்கனைகளும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.

தமிழ் விளையாட்டு வீரர்களிற்கு ஒரு களமமைத்துக் கொடுக்கும் இடமாக இந்த விளையாட்டு விழா அமைந்ததெனவும், தாயகத்தையும், தமிழீழத்தையும் நினைத்து கொள்ளும் இடமாகவும் இது இருந்ததென பலரும் பாராட்டினார்கள்.



































No comments:

Post a Comment