கொலை வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆஜராக தேவையில்லை
யாழில் உள்ள இந்திய தூதரகம் ஊடாக ஆயராக வேண்டும் என்று நீதிமன்றம்
அறிவித்துள்ளது.
கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை சூளைமேட்டில் கடந்த 1986ல் திருநாவுக்கரசு என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஜாமினில் வெளியே வந்த தேவானந்தா விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, அவர் 1996ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம், டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, டக்ளஸ் தேவானந்தா சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கொலை வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவரை நேரில் ஆஜராகும்படி சென்னை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும், விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா, யாழில் உள்ள இந்திய துணை தூதரகம் மூலம் வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

No comments:
Post a Comment