சிலாபம் – முன்னேஸ்வரம் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற மோதலில் இருவர்
காயமடைந்துள்ளனர். மேலும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக்
கூறப்படும் எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6.30 அளவில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு தோடலக பகுதியில் இருந்து சென்ற குழுவினருக்கும், கோவிலுக்கு அருகில் பழ விற்பனையில் ஈடுபடும் குழுவினருக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. முன்னேஸ்வரம் பத்ரகாளி அம்மன் ஆலய மிருகபலி பூஜை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்தததை அடுத்து அது கைகலப்பில் முடிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்திர உற்சவம் நேற்று ஆரம்பமானாலும், நீதிமன்ற உத்தரவு காரணமாக பக்தர்கள் கொண்டுவந்த மிருகங்களை பலி கொடுக்க முடியாமல் போயுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர், உள்ளூர் பிரதேச சபையின் அனுமதி பெற்றே அங்கு மிருகபலி கொடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் தாங்கள் இந்த அனுமதியைக் கோரவில்லை என்று தலைமை பூசாரி காளிமுத்து சிவபாதசுந்தரம் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment