August 9, 2014

வடமாகாண சபையின் வளர்ச்சிப் பணிகளுக்குப் போதிய நிதியை அரசாங்கம் வழங்கவில்லை!

வடமாகாண சபையின் வளர்ச்சிப் பணிகளுக்குப் போதிய நிதியை அரசாங்கம் இன்னும் முழுமையாக வழங்காதுள்ளபடியால் சபை நடவடிக்கைகளை
முன்னெடுப்பதில் பெரும் பிரச்சனைகள் உள்ளதாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட விசேட நிதியிலிருந்து 22 மிலியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா வைத்தியசாலை மருத்துவ நிபுணர்களுக்கான விடுதி கட்டடத்தை அவர் நேற்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாகத் திறந்து வைத்து அங்கு பேசும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாண சபைக்கு பெருந்தொகையான நிதி ஒதுக்கப்படுவதாக அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்றது. ஆனால் கூறப்படுகின்ற நிதியில் சிறிய தொகையையே எங்களுக்கு வழங்குகின்றது. மிகுதி நிதியை அவர்கள் செலவு செய்கின்றார்கள்.
அதனை எதற்கு, எப்படி செலவு செய்கின்றார்கள் என்பது தெரியவில்லை. இந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டதாகும். இனிமேலாவது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுடன் இணைந்து அரசாங்கம் மக்களுக்காகச் செயற்பட முன்வரவேண்டும்' என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.
இதேவேளை, மிகவும் பின்தங்கிய பிரதேசமான ஓமந்தை பாமோட்டை நவ்வி பகுதியிலும், முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை பகுதியிலும் இரண்டு கிராமிய வைத்தியசாலைகளை அமைப்பதற்கான அடிக்கற்களையும் நேற்று முதலமைச்சர் நாட்டி வைத்தார்.

No comments:

Post a Comment