August 10, 2014

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை!

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட
சிறுவர்கள் இருவரில், 3 வயது சிறுவன் ஒருவனுக்கு தவறான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டள்ளது.  இதேவேளை மற்றைய ஒன்றரை வயது சிறுவனுக்கும் தவறான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்தபோது, அது பெற்றோர்களால் தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் சத்திர சிகிக்சைக்காக சிறுவர்கள் இருவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 3 வயது சிறுவனுக்கு தவறான சத்திரசிகிச்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த சிறுவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யோகேஸ்வரன் சுபாஸ் என்ற 3 வயது நிரம்பிய சிறுவன் கேணியா சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில் குறித்த சிறுவனுக்கு சிறுநீரகப் பிரச்சினை தொடர்பான சத்திரசிகிச்சையை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மா.சச்சிதன் என்ற ஒன்றரை வயது சிறுவன் சிறுநீரகப் பிரச்சினை தொடர்பான சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த சிறுவனுக்கு கேணியா சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்தபோது, அது பெற்றோர்களால் அறிவிக்கப்பட்டு தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அதிகாரிகளை நியுஸ்பெஸ்ட் தொடர்பு கொள்வதற்கு பல தடவைகள் முயற்சித்த போதும், அவர்கள் அதற்கு உரிய பதிலை அளிக்காமல் தொடர்பைத் துண்டித்தமை குறிப்பிடத்தக்கது.Kilinochchi-Hospitail

No comments:

Post a Comment