August 10, 2014

ஓமந்தை சோதனைச்சாவடிக்கு வந்த மகளை கணவில்லை!

ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து தனது மகள் காணாமல்
போயுள்ளதாக இலுப்பைக்கடவையினைச் சேர்ந்த புலபாலசிங்கம் ரஞ்சிதமலர் என்ற தாய் நேற்று(9) சனிக்கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் மகிந்த ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில்.
எனது மகளான புலபாலசிங்கம் நிரஞ்சினி அப்போது வயது-18,உயர் தரம் படித்துக்கொண்டிருந்த வன்னியில் இருந்து படைக்கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்த போது கடந்த 19-03-2009 அன்று ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து விசாரனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் காணமால் போயுள்ளார்.
தற்போது எனது மகள் எங்கே இருக்கின்றார் என்ற விடையம் எனக்குத்தெரியவில்லை.
படைக்கட்டுடப்பாட்டு பகுதியான ஓமந்தை சோதளைச்சாவடிக்கு வந்த பிள்ளை எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லை.என அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment