August 9, 2014

வவுனியா ஜோசப் முகாமில் தடுத்து வைக்கப்பட்ட எமது மகன் எங்கே? தாயார் கேள்வி!

இலுப்பைக்கடவையில் இருந்து இடம் பெயர்ந்து சென்ற போது முல்லைத்தீவு
இரட்டை வாய்க்கால் பகுதியில் எனது மகன் காணாமல் போன நிலையில் வவுனியா ஜோசப் முகாமில் தடுத்து வைக்கப்பட்டு நான் நேரடியாக கண்ட மகன் காணாமல் போயுள்ளதாக மன்னார் இலுப்பைக்கடவையைச் சேர்ந்த ஈஸ்வரம் கனகராணி என்ற தாய் இன்று சனிக்கிழமை(9) காணாமல் போனவர்களை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.
மாந்தை மேற்குபிரதேசச் செயலகத்தில் இரண்டாவது நாளாக இன்று சனிக்கிழமை இடம் பெற்ற விசாரனைகளின் போதே ஈஸ்வரம் கனகராணி எனும் தாய் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில்,,,,
இடம் பெற்ற யுத்தத்தின் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கிராமத்தில் இருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்து சென்ற போது முல்லைத்தீவு இரட்டை வாய்க்கால் பகுதியில் வைத்து எனது மகன் காணாமல் போனார்.
இந்த நிலையில் அவரை நாங்கள் தோடிய நிலையில் 2010 ஆம் ஆண்டு வவுனியா ஜோசப் முகாமிற்கு என்னை விசாரனைக்காக வருமாறு சி.ஐ.டி அழைத்தனர்.
முதல் தடவையாக விசாரனைக்கு சென்ற போது பெயர் விபரங்களை பெற்றுக்கொண்டதோடு தனி கோவை ஒன்றை தயார் செய்தனர்.
பின் சுமார் ஒன்றரை மாதங்களின் பின் எனது தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்தி வவுனியா ஜோசப் முகாமிற்கு வருமாறு அழைத்தனர்.பின் நான் அங்கு செல்ல அம்மா உங்கள் பெயர் சஜீவன் என கேட்டு வீட்டு இருக்குமாறு கூறினார்கள்.
பின் எனது மகனின் பெயர் விபரங்களை அவர்கள் பரிசீலினை செய்த பின் உங்களின் மகனின் பெயர் விவரம் வரவில்லை.
நீங்கள் போகலாம் என்றார்கள்.மூன்றாம் தடவையாகவும் 08-12-2010 அன்று விசாரனைக்காக அழைத்தார்கள்.
நான் அங்கு சென்றேன்.ஆனால் எவ்வித விபரமும் இல்லை என கூறினார்கள்.நான் திரும்பிச் சென்றேன்.
நான்காவது தடவையாக எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் ஆனால் தொலைபேசி இயங்கவில்லை என தெரிவித்தனர்.
பின் பொலிஸ் நிலையத்தினுடாக என்னை வவுனியா ஜோசப் முகாமிற்கு வருமாறு அழைத்த நிலையில் நான் அங்கு சென்றேன்.
நான் யாழ்ப்பாணத்தில் இருந்து முதல் நாள் வவுனியா சென்று வீடு ஒன்றில் தங்கி நின்று மறுநாள் 15-06;-2011 காலை 9 மணியளவில் வவுனியா ஜோசப் முகாமிற்குச் சென்றேன்.
இதன் போது அங்கிருந்த சி.ஐ.டி யினர் எனது பிள்ளைக்காக தயார் செய்த பயிலை மட்டுமே கொண்டு சென்று விசாரனை செய்தார்கள்.ஆனால் என்னைக்கூப்பிட்டு எந்த விசாரனைகளும் செய்யவில்லை.
கடைசியாக நான் அங்கிருந்த அதிகாரியை கூப்பிட்டு நான் யாழ்ப்பாணம் போக வேண்டும் நேரம் போகுது பஸ் பிடிக்க வேண்டும் எனது பிள்ளைகளை தனிமையில் விட்டு வந்துள்ளேன் என தெரிவித்தேன்.விசாரனைக்காக அழைக்கப்பட்ட போதும் விசாரனை செய்ய வில்லை என தெரிவித்தேன்.
இதன் போது குறித்த சி.ஐ.டி.அதிகாரி ஈஸ்வரம் கனகராணி சுஜீவன் என கேட்டார்.
அதற்கு ஆம் என தெரிவிக்க கெஞ்சம் இருங்கள் தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவர் வரட்டும் என தெரிவித்தார்.இந்த நிலையில் மதியம் 12.45 மணியளவில் என்னை வெளியில் அழைத்து கூட்டிச் சென்றார்கள்.
இதன் போது நான் இடையில் வைத்து கேட்டேன் என்னை எங்கே கூட்டிச் செல்லுகின்றீர்கள் என கேட்டேன்.
நாங்கள் வவுனியா பொலிஸ் நிலையத்திற்குத்தான் உங்களை கூட்டிக்கொண்டு போகின்றோம் என தெரிவித்தனர்.
அங்கு தான் உங்களை கூட்டிக்கொண்டு போய் விசாரனை செய்ய வேண்டும் என குறித்த அதிகாரி தெரிவித்தார்
.சரி என கூறி நான் அவர்கள் பின் அச்சத்தின் மத்தியில் சென்றேன்.இருந்தும் தமிழ் தெரிந்த சி.ஐ.டி ஒருவர் என் பின்னால் வந்தமையால் ஒரு துனிவுடன் சென்றேன்.
என்னை கம்பி ஓடை ஒன்றினால் அழைத்துச் சென்றார்கள்.நான் நெழிந்து நெழிந்து சென்றேன்.இதன் போது ஒருவரையும் காணவில்லை.
மூன்றாவது கம்பிக்கூட்டினுள் அந்த அன்று இரவு அழைத்து வரப்பட்ட வருவர் நிற்பது போல் தெரிந்தது.தலைமுடி வெட்டி முகச்சவரம் செய்யப்பட்டு அடையாளம் காண முடியாதவாறு காணப்பட்டார்.
ஆனால்; அது எனது பிள்ளை சஜீவன் என நான் அடையாளம் கண்டு விட்டேன்.பிள்ளை என்னைப்பார்த்து அம்மா என்று கூப்பிட முயற்சி செய்த போது குறித்த சி.ஐ.டி அதிகாரி என்னை பார்த்து பிள்ளையை பாரூங்கள் என கூறினார்கள்.
நான் உடனடியாக பார்த்து விட்டு சேர் இது எனது பிள்ளை என நான் கத்த அக்கா இது உங்களின் பிள்ளையா? நடவுங்கள் கெதியா என என்ன வற்புறுத்தி அழைத்துச் சென்றார்கள்.
எனது பிள்ளையை ஒழுங்காக பார்க்கக்கூட விடவில்லை.இரண்டு நிமிடங்கள் கூட எனது பிள்ளையுடன் கதைக்க விடவில்லை.பிள்ளை என்னுடன் கதைக்க முற்பட்ட போது குறித்த சேர் என்னை அழைத்துச் சென்று சுமார் 5 மணித்தியாளங்கள் வரை விசாரனை செய்தனர்.
இதன் போது நான் அழு அழு என அழுது நான் வைத்திருந்த எனது பிள்ளளையின் புகைப்படத்தைக்காட்டி பார்க்கும்படி கூறினேன்.
இது எனது பிள்ளை என கூறினேன்.இதன் போது பொலிஸ் றிப்போட்டை கொண்டு வரும்படி கூறினார்கள்.நான் கொண்டு சென்றிருந்த போது குறித்த ஆவணத்தை கொடுத்தேன்.
அவர்கள் கொண்டு வரும்படி கூறிய அணைத்து ஆவணங்களும் கொண்டு வந்திருந்தேன்.அவர்களிடம் அதனைக்கொடுத்தேன்.
விசாரனைகளின் போது கொழும்பில் தேடினீர்களா? முகாம்களுக்குச் சென்று பார்த்தீர்களா என கேட்டார்கள்.
அதற்கு நான் கூறினோர் போய் தோடுவதற்கு வசதி இல்லை.அதனால் போகவில்லை என தெரிவித்தேன்.அதற்கு தெரிவித்த குறித்த அதிகாரி பிள்ளைகளை கொண்டு போய் துழைத்து போட்டு இங்கு வாங்க என தெரிவித்தார்.
அப்போது பிள்ளையை நான் துளைத்தது உன்மை.இந்த நிலையில் பிள்ளை இங்க இருக்கின்ற படியால் தான் பிள்ளையை காட்டுவதற்காக நீங்கள் என்னை அழைத்துள்ளீர்கள் இதனால் தான் நான் இங்கு வந்துள்ளேன் என்றேன்.
இதன் போது குறித்த அதிகாரி கேட்கின்ற கேல்விக்கு பதிலைச் சொல்லுங்கள் என கூறினார்.நீங்கள் இங்கு எப்போது வந்தீர்கள் என கேட்டதற்கு நான் காலை 9 மணிக்கு வந்தேன்.உங்கள் அலுவலகத்தில் இருந்தேன்.ஒருவரும் ஒன்றும் கேட்கவில்லை என தெரிவித்தேன்.
பின் என்னிடம் முறைப்பாடுகளை முழுமையாக பதிவு செய்த சீ.ஐ.டி யினர் என்னிடம் கையொப்பத்தை பெற்றுக்கொண்டு எங்களிடம் வந்து பதிந்ததை எங்கு சென்றும் முறையிடக்கூடாது.
நிறுவனங்களிலும் முறையிடக்கூடாது.நீங்கள் அங்கேயே போய் இருங்கள்.நாங்கள் அடுத்த தடவை விசாரனைக்காக அழைப்போம்.வாங்கள் என்று தெரிவித்தனர்.
அதற்கு நான் கூறினேன் சேர் அது என்னட பிள்ளை ஒருக்கா காட்டுங்கள் என கூறினேன்.அதற்கு அவர்கள் கூறினார்கள் அம்மா நாங்கள் ஒருக்கா சொன்னால் நீங்கள் கேளுங்கள்.
உங்களின் பிள்ளை என அடையாளம் காட்ட முடியுமா?நடவுங்கள் கெதியா உங்களை ஜீப்பில் ஏற்றி வவுனியா டவுனில் விடுவோம் என தெரிவித்தார்கள்.
இல்லை நான் நடந்து போகின்றேன் என கூறி சென்றேன்.என குறித்த தாய் சாட்சியமளித்தார்.

No comments:

Post a Comment