August 9, 2014

மட்டு மாவட்டத்தில் 30 தமிழ் கிராமங்கள் சிங்கள மயமாக்கப்படும் ஆபத்தில்!


மட்டக்களப்பில் 30 தமிழ்க் கிராமங்கள் சிங்கள கிராமங்களாக மாற்றப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கிழக்கு மாகாண சபை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கோரலைப்பற்று மற்றும் ஏறாவூர்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 30 கிராமங்களே இவ்வாற சிங்கள கிராமங்களாக மாற்றப்படவுள்ளன. பொலனறுவை மற்றும் அம்பாறையில் உள்ள சிங்கள குடும்பங்கள் அங்கு குடியேற்றம் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் முதல்கட்டமாக அந்த பகுதியில் இராணுவத்தினரை அனுப்பி காணிகளை சுவீகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசாங்கம், சுவீகரிக்கப்பட்ட காணிகளில் விகாரைகளை அமைத்து பௌத்த பிக்குகளை தங்க வைக்க திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் இந்த கிராமங்கள் சிங்களவர்களின் குடியேற்ற கிராமங்களாக அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment