August 16, 2014

மாணவர்கள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் - தமிழ் இளையோர் அமைப்பு

புலிப்பார்வை  திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்வில்  கலந்துகொண்டு எதிர்ப்பினை தெரிவித்த  மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதை தமிழ் இளையோர் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற புலிப்பார்வை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இவ் விழாவில்   ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பினை தெரிவித்த மாணவர்கள் மீது இத் திரைப்படத்தின் ஆதரவாளர்கள்  கம்பி, கட்டைகளால்  கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை பற்றியும் , சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தம்பி பாலசந்திரனை பற்றியும்  தவறான கருத்துக்களை பரப்பும் விதமாக புலிப்பார்வை  திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இத் திரைப்படம் தமிழீழ விடுதலைக்கு எதிரான கருத்துக்களுடன் புலம்பெயர் நாடுகளில் வெளிவருமாயின் அதற்கு எதிராக நாம் போராட்டங்களை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம்.

மாணவர்களுக்கு ஆதரவாகவும் இப் படத்திற்கு எதிராகவும் போராட வேண்டியவர்கள் இத் திரைப்படங்களை முன்னிலைப்படுத்தி பிரிந்து செயற்படுவது புலம்பெயர் இளையோர்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இத் தருணங்களில் அனைவரும் ஒற்றுமையுடன் போராடுவது எமது தார்மீக கடமையாகும். எனவே மனக்கசப்புக்களை விடுத்து ஒற்றுமையுடன் தமிழ்த்தேசிய வழியில் போராடுமாறு  உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தாக்குதல்களை நடாத்தியவர்களை விடுத்து காயமடைந்த மாணவர்களை காவல்துறையினர் கைது செய்ததும், தாக்குதல்களை நடாத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததும்  மிகவும் கண்டனத்திற்குரிய விடயமாகும். மாணவர்களை விடுதலை செய்வதோடு, தாக்குதல்களை நடாத்தியவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை   தமிழ் இளையோர் அமைப்பு கேட்டுக் கொள்கிறது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு

No comments:

Post a Comment