தமிழீழம் 5 எழுத்துச் சொல். ஆனால், ஈழத்தமிழர்களின் மனங்களில் அழிக்கவும்
திருத்தவும் முடியாத ஒரு பொருள். அடிமைத்தனத்தையும்
அடக்குமுறையையும் உடைத்துக்கொண்டு வீறுகொண்டு எழும்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நீருக்கு பதிலாக இரத்தத்தை பாய்ச்சி வளர்த்த பெருவிருட்சம் எந்த சூறாவளியாலும் அசைக்க முடியாத விருட்சம்.
சிறிது காலமாக இணையத்திலும் பத்திரிகைகளிலும் அடிபட்ட ஒரு கதை. மகிந்தவுக்கு சர்வதேச அரங்கில் ஏதோ ஒன்றை பேசுவதற்க்கு கதை எடுத்துக்கு கொடுத்த விடயம். இந்தியாவுக்கு தமிழக மக்களுக்கு சாட்டு சொல்ல கிடைத்த ஒரு புரட்டு. அது தான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழீழத்தை கைவிட்டது எனும் செய்தி. சொல்லப்போனால் இது ஒரு நகைச்சுவை செய்தி. அதாவது பக்கத்து வீட்டுக்கார கணவன் மனைவியை விவாகரத்து எடு என்று சொல்வதைப்போலதான். ஏன் என்றால் விவாகரத்து ஒன்று பெறவேண்டுமானால் ஒன்று அந்தக்கணவன் முடிவெடுக்க வேண்டும் அல்லது மனைவி முடிவெடுக்கவேண்டும்.
அதெப்படி பக்கத்து வீட்டுக்காரன் முடிவெடுக்க முடியும். அதாவது தமிழீழத்தை கைவிடுவதென்றால் ஒன்று தமிழீத்துக்காக போராடிக்கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் முடிவெடுக்க வேண்டும் அல்லது விடுதலைப்போராட்டத்துக்காக தமது இன்னுயிரையும் வாழ்வையும் அர்ப்பணித்த தமிழீழ மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
அதை விடுத்து ஆயதங்கள் மௌனிக்கப்படும் வரை மகிந்தவின் மடியில் தவழ்ந்து விட்டு இப்பொழுது வந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முடிவெடுக்க முடியும் என்று கேட்டால் அதற்கும் அவர்களிடம் பதில் இருக்கிறது.
ஒன்று "நாங்கள் தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகள்" என்று ஒன்றை சொல்வார்கள். "தமிழ் மக்கள் எங்களை மாகாணசபையில் ஏகமனதாக தெரிவு செய்தனர்" என்று சொல்வார்கள்.
உண்மையில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தெரிவு செய்தற்கான ஒரு காரணம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது எனும் பெயர். மற்றையது தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு மாற்றாக தாயகத்தில் வேறு கட்சிகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒருவிடயம். ஆகவே இவர்களுக்கு தமிழீழத்தை கைவிடும் உரிமை யார் கொடுத்தது.
தமிழீழ கோரிக்கையை கைவிடுவதோ, கையில் எடுப்பதோ எந்த முடிவையும் எடுக்கும் உரிமை தமிழீழ மக்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் மட்டுமே உண்டு. அதைவிடுத்து கூட்டமைப்பு போன்ற கூத்தமைப்பினதும் நீதி இறந்த சிறீலங்கா நீதிமன்றங்களினதும் முடிவுகளும் எங்கள் சுதந்திர வேட்கையை எந்த விதத்திலும் அணைத்து விடப்போவதில்லை.
ஈழத்தமிழர்களாகிய நாம் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும். ஏமது இலட்சிய பாதையில் முறைதவறாது பயணித்துக்கொண்டே இருப்போம் என்பது நிதர்சனமான உண்மை.
தமிழீழ தாகம் தணியாது எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது...
- ஈழத்தில் இருந்து சேவின் தோழன்

No comments:
Post a Comment