August 14, 2014

புலிப்பார்வை இசை வெளியீடு விழாவில் வைகோ கலந்துகொள்ள மறுப்பு!

பாலசந்திரனின் வாழ்க்கையை மையபடுத்தி எடுத்ததாக கூறப்படும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு பல தரப்புகளிடமிருந்தும் இருந்தும் மாணவர்களிடமும் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பி அது போராட்டமாக மாறியது.

இதனை அடுத்து மாணவர்கள் புலிப்பார்வை திரைப்படத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறி உள்ள நிலையில். நேற்று புலிப்பார்வை திரைப்படம் போட்டு காண்பிக்க பட்டது.
இவ் படம் பிரத்தியோகமாக திரையாடப்பட்டது மாணவர்கள் , அய்யா.நெடுமாறன் , சீமான் , சில முக்கிய மதிமுக உறுப்பினர்கள், இயக்குனர் கவுதமன் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.
படம் முழுக்க பாலச்சந்திரனோடு,பல குழந்தைகள் சிறார் போராளிகளாகவே காட்டப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுப் போர் எனும் அளவிலேயே, அதாவது தமிழர்களும் இறந்தனர். சிங்களவர்களும் இறந்தனர். சிங்கள பௌத்த இனவாதத்திற்குப் பதிலாக சிங்களவர்களின் பெருந்தன்மையும், தங்கள் மண்ணை மீட்க சிங்கள அரசு நடத்திய போர்.
இந்தியா - ஈழத் தமிழர்கள் மீது அதிக அக்கறை கொண்ட நாடு பார்ப்பனீயத்திற்க்கு ஆதரவாக சில காட்சிகள், தமிழீழ போராட்ட வரலாற்றையும்,போராளிகளையும் முழுக்க முழுக்க இழிவுபடுத்தி எடுக்கப்பட்டதாக பார்வையிட சென்றவர்கள் கூறினார்கள்.
இது கூறித்து எமக்கு கருத்து தெரிவித்த அய்யா.நெடுமாறன் அவர்கள் படத்தில் உள்ள 75 % வித காட்சிகள் நீக்கப்படவேண்டும் என்றும் தனக்கு இந்த படத்தில் உடன் பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். பாலசந்திரன் சீருடையுடன் வரும் காட்சிகள் மேலும் சில காட்சிகள் நீக்கபடாமல் திரையிட வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறிபிட்டுள்ளார்.
மாணவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வரும் 16 ஆம் திகதி நடை பெறும் புலிப்பார்வை இசை வெளியீடு விழாவில் கலந்து கொள்ள உள்ளார் என்று இன்று காலை செய்தி வெளியானது இதனை அடுத்து பதிவு இணையம் மதிமுகவினரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர்கள் இதனை மறுத்துள்ளனர். புலிப்பார்வை இசை வெளியீடு விழாவிற்கு அழைப்பு விடுக்கபட்டது ஆனால் தமிழீழ போராட்ட வரலாற்றையும், போராளிகளையும் முழுக்க முழுக்க இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட காரணத்தால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் அந்த விழாவில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment