August 5, 2014

சென்னை சிறீலங்காத் துணைத் தூதரக முன்றலில் பொங்கியெழுந்தனர் தமிழ்நாட்டுத் திரையுலகத்தினர்!

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மீதான சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் அவமதிப்புக் கட்டுரைக்கு எதிராக தமிழக திரையுலகத்தினர்
தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


இன்று சென்னை நுன்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சிறீலங்கா துணைத் தூதரகத்தின் முன்பாக முற்பகல் 10 மணிக்கு இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


போராட்டத்தில் முன்னணி திரைப்பட நடிகர்கள், திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கலந்துகொண்டு சிங்கள அரசாங்கத்திற்கு எதிரான தாயைப் பழித்தவனை தரணியை ஆண்டாலும் விடமாட்டோம், உலகம் போற்றும் தமிழர் தாயை பழிக்க நினைக்காதே, நீ கொச்சைப்படுத்த நினைத்தது தமிழக முதல்வரை அல்ல 10 கோடி தமிழர்களின் தாயை! தேசப் பிதா என்றால் காந்தி பெரியார் என்றால் ஈவெரா அம்மா என்றால் எங்க முதல்வர்தான்! எனக் கோசங்களை எழுப்பினர்.






No comments:

Post a Comment