ஐ.நா மனிதவுரிமைகள் செயலகத்தின் போர்க்குற்ற விசாரணை நடைபெறவிருக்கும் இவ்வேளையில் அதற்கு உதவிடும் பிரான்சு பாராளுமன்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு
குழுவும், மறாப் (MARAP) என்கின்ற அரசசார்பற்ற அமைப்பும்.
அன்பான தமிழீழ உறவுகளே!
தமிழீழ மக்களின் உரிமைப்போராட்டமும், சிங்கள பேரினவாத அரசின் தமிழினப்படுகொலையும், 2009 உடன் முற்றுப்பெறவில்லை.. இன்னும் இங்கொன்றும், அங்கொன்றுமாக நடந்து கொண்டேயிருக்கின்றது. இழந்து போன தனது உரிமைக்காக போராடிய தமிழினம் 2009ல் சர்வதேசத்தின் கண்முன்னால் குறுகிய நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர்கள் போர் ஆயுதங்களால் பறிக்கப்பட்டது.
எங்கள் தமிழ்ப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்கவீனர்களாக்கப்பட்டனர். எஞ்சியவர்கள் பெற்றோர்களாலும், துணைவிமார்களாலும், கிறித்துவ துறவிகள் மூலம் உயிருடன் இராணுத்திடம் கையளிக்கப்பட்டனர். அவர்கள் எங்கே? இன்னும் அதனைவிட 1.46.579 மக்கள் காணாமற் போயுள்ளனர் அத்துடன் தமிழர்களின் வாழ்விடம், கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன எஞ்சியவை பறிக்கப்பட்டன. இந்நிலையில் இப்போதுதான் சர்வதேசம் கண்விழித்துள்ளது.
2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் nஐனீவா மனிதவுரிமைகள் செயலகத்தில் இலங்கைத்தீவில் போர்க்குற்றம் நடைபெற்றிருக்கின்றது அதனை விசாரணை செய்ய வேண்டும் என்கின்ற தீர்மானம் கனடா, பிரித்தானியா ஆதரவுடன் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டது.
இதற்கான வாக்கெடுப்பில் 2013 ம் ஆண்டு 40 நாடுகள் ஆதரவு தெரிவித்தமையும் 23 நாடுகள் வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும். இன அழிப்பிற்குள்ளான பகுதியையும், பாதிக்கப்பட்ட மக்களையும் மனிதவுரிமைகள் மையத்தின் செயலாளர் திருமதி. நவநீதம்பிள்ளை அவர்கள் சென்று பார்த்ததும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தமையுமே ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்கா மீதான அழுத்தங்களுக்கு காரணங்களாக அமைந்தன ஐ.நாடுகள் சபையின் அழுத்தங்களுக்கு அடிபணிந்தது போன்று சிறீலாங்கா அரசால் சர்வதேச கண்துடைப்புக்காகக் கொண்டு வரப்பட்ட சுயாதீன விசாரணைக்குழுவும் அவர்களின் விசாரணையும் தமிழர்களின் இன அழிப்பை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்போவதைக் தடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை தற்போது சர்வதேச விசாரணை தொடங்கியுள்ள நிலையில் தமிழினப்படுகொலைகள் ஆதாரத்துடன் வெளிவந்த நிலையில் இப்படுகொலைகளைப் புரிந்தவர்கள் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சத்தில் தற்பொழுது மகிந்த அரசு தனக்கு விசுவாசம் மிக்கவரான சேர். டேஸ்மின் டீ சில்வா என்பவரைக் தலைவராகக் கொண்டு மீண்டும் ஓரு சர்வதேச விசாரணைக்குழுவை நியமித்துள்ளார். இது சர்வதேச நெருக்கடிக்குள் சிறீலங்கா அரசு சிக்கிக்கொண்டுள்ளது என்பதையே சுட்டிநிகின்றது.
இந்த வகையில் சிறீலங்கா அரசின் இனச்சுத்தீகரிப்பில் சிக்கிச் சின்னாபின்னமாகி உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழ்மக்கள் தாம் வாழும் நாட்டு அரசிடம்
தமக்கிழைக்கப்பட்ட கொடுமைகளை எவ்வாறு எடுத்தியம்பி அரசியல் அடைக்கலத்தையும் அகதி அந்தஸ்;த்தையும்; பெற்றுக்கொண்டார்களோ அதனை ஒவ்வொரு நாடுகளிலும் இயங்கும்
பதிவுகளை முன்னெடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் குழுவிற்கும் அதற்கு ஆதரவான செயற்படும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளுக்கும் சென்று தெரிவிக்க வேண்டும்.
தாய்தமிழகத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மதிப்புக்குரிய மாண்புமிகு செல்வி. ஜெயலலிதா அம்மையார் சட்டசபையில் எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களும் விசாரணைக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையிலும் சாட்சி சொல்ல மக்கள் தயாராகி வருகின்றனர் பாதிப்புக்குள்ளான புலத்தில் வாழும் ஈழத்தமிழ் மக்களும் நிச்சயம் அதற்குத் தயாராக வேண்டும் இது ஒரு வரலாற்றுக்கடமையும் கூட.
அன்பார்ந்த பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!
• ஐ.நாவின் மனிதவுரிமைக் குழுவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஆதரவாக பிரான்சில் உள்ள அரசசார்hற்ற நிறுவனமான ( மறாப் ) ஆயசயி என்ற அமைப்பு பிரான்சு பாராளுமன்றத்தின் ஈழத்தமிழ் மக்கள் பாதுகாப்பு செயற்குழுவின் ஆதரவுடன் சிறீலங்கா அரசினால் பாதிப்புக்குள்ளான தமிழ்மக்களின் வாக்கு மூலங்களை இரகசியத்தன்மையுடனும் பாதுகாப்புடனும் மனிதநேயத்துடனும் பெற்றுக்கொள்வதற்கு முன்வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்களை நம்பி மண்ணுக்குள் புதையுண்டு போன எங்கள் அன்பு உறவுகள் அனைவருக்கும் எமது எதிர்கால சந்ததியினருக்கும் ஒவ்வொரு தமிழனும் செய்யப்போகும் ஓர் உன்னதமான கடமை இதுவாகும்.
முதற்கட்டமாக உங்களுக்கு தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்ள உங்கள் தொடர்புகளை தமிழீழ மக்கள் பேரவையுடன் ஏற்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
MTE
28, Place de la Chapelle
75018 Paris.
Tel: 06 52 72 58 67
Métro (2) La Chapelle

No comments:
Post a Comment