கத்தி திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் என்று தமிழக மாணவர்களின் கோரிக்கைகள் வலுத்துக்கொண்டு வருவதாக எமது தமிழக செய்தியாளர் தொிவிக்கின்றார்.
சிறீலங்கா இனப்படுகொலையாளன் மகிந்தவின் கைக்கூலி நிறுவனமான லைக்காவின் தயாரிப்பில் ஜோசப் விஜய் நடித்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி விரைவில் திரைக்கு வர இருக்கும் கத்தி திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர் இயக்கங்கள் பரவலாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழகத்தின் உயர் மட்ட அரசியற் தலைவர்கள் கவனத்துக்கும் சென்றிருப்பதாகவும் செய்திகள் தொிவிக்கின்றது. மாணவர்களின் கடும் முயற்சியின் பயனாக இவ்வெளிப்பாடுகள் காணப்படுவதாக அறியப்படுகின்றது.


No comments:
Post a Comment