யாழ்.நீர்வேலிப் பகுதியில் . வெடிமருந்துகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேயிடத்தினைச் சேர்ந்த 36 அகவையுடைய ஆசைப்பிள்ளை சசீந்திரன் என்பவர்
நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக அச்சுவேலி காவல்துறை அறிவித்துள்ளது.
அத்துடன், மேற்படி நபரிடமிருந்து 23 கிலோ 270 கிராம் ரி.என்.ரி வெடி மருந்தினையும் மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.


No comments:
Post a Comment