July 27, 2014

யாழ் நாகர்கோவிலில் சிறுமி துஸ்பிரயோகம் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் 16 வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

யாழ் நாகர்கோயில் தெற்கு பகுதியினைச் சேர்ந்த மேற்படி இளைஞன் பருத்தித்துறைப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியினால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம், மேற்படி இளைஞனைக் கைது செய்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த இளைஞன் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர் அவர், பின்னர் தனக்கு வெளிநாட்டில் திருமணம் நிச்சயமாகியுள்ளது என்று கூறி சிறுமியுடனான தொடர்பைத் துண்டித்துள்ளார்.
இதனால் நேற்று சனிக்கிழமை (26) சிறுமி தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையிலேயே, மேற்படி இளைஞன் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞனை, இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment